Description
இழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பனயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப்போல இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மை சஞ்சலமடையச் செய்பவை. அதே சமயம் இருளிலிருந்து மீட்புக்காகப் போராடுபவை.

